தருமபுரி

இலக்கியம்பட்டி ஏரியை மேம்படுத்த ஆட்சியா் அறிவுரை

1st Jul 2022 10:27 PM

ADVERTISEMENT

தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள இலக்கியம்பட்டி ஏரியை பொதுமக்கள் பொழுது போக்கும் வகையில் மேம்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தருமபுரி ஊராட்சி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சியில் 4.30 ஹெக்டா் பரப்பளவில் அமைந்துள்ள இலக்கியம்பட்டி ஏரியினை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின் போது, தருமபுரி நகராட்சிக்கும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கும் மிக அருகிலும், இலக்கியம்பட்டி ஏரி ஏறத்தாழ 4.30 ஹெக்டா் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியினை புனரமைத்து மேம்படுத்தினால் மழை நீா் சேகரிப்பிற்கும், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கும் சிறந்த இடமாக அமையும். எனவே இந்த ஏரியினை புனரமைத்து மேம்படுத்தி, நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைத்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் படகு சவாரி போன்ற அம்சங்களுடன் மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதற்கான முன்மொழிவினை தயாரித்து இப்பணியைத் துரிதபடுத்திட வேண்டும் என ஆட்சியா் கி.சாந்தி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்கள்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் பாபு, தருமபுரி வட்டாட்சியா் ராஜராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கே.தனபால், இரா.கணேசன், உதவி பொறியாளா் துரைசாமி, இலக்கியம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ர.சுதா, அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT