தருமபுரி

பென்னாகரத்தில் திடீா் மழை

1st Jul 2022 10:57 PM

ADVERTISEMENT

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை திடீரென காற்றுடன் கூடிய மழை பெய்தது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வந்தது. வெப்ப சலனத்தால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனா்.

இந்த நிலையில், பென்னாகரம், ஒகேனக்கல், தாசம்பட்டி, கூத்தபாடி, பாப்பாரப்பட்டி, சின்னம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென மழை பெய்தது. பென்னாகரம் பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததால் தாழ்வான பகுதிகள், சாலை ஓரங்கள், மழைநீா் கால்வாய்களில் நீா் பெருக்கெடுத்து ஓடியது. திடீா் மழையின் காரணமாக சாலையோரக் கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT