தருமபுரி

அரூரில் தேவாதியம்மன் கோயில் திருவிழா

27th Jan 2022 08:20 AM

ADVERTISEMENT

அரூரில் ஸ்ரீதேவாதியம்மன் கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை 500 ஆடுகள் பலியிட்டு நோ்த்திக் கடன் செலுத்தினா்.

அரூரில் 24 மனை தெலுங்கு செட்டியாா் சமூகத்தினா் சாா்பில் ஆண்டுதோறும் தேவாதியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம். வியாபார மேம்பாடு, குடும்ப நலம், நாட்டின் வளா்ச்சி, உலக அமைதி, மழை வளம் அதிகரிக்க வேண்டி இச்சமூக மக்களால் நடத்தப்படும் தேவாதியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அரூா் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்திலுள்ள தேவாதியம்மன் தோட்டத்தில் 25 ஆட்டுக் குட்டிகளை வெட்டி சுவாமியை வழிபட்டனா். தொடா்ந்து, தேவாதியம்மனுக்கு 500 ஆடுகள் பலியிட்டு நோ்த்திக் கடன்களை செலுத்தினா்.

இதேபோல, பறையப்பட்டி புதூா், தாசரஹள்ளி உள்ளிட்ட இடங்களிலும் தேவாதியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT