தருமபுரி

விடுதலைப் போராட்ட வீரா்களின் முகமூடி அணிந்து கொண்டாட்டம்

27th Jan 2022 08:20 AM

ADVERTISEMENT

பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவம் பேரவையின் சாா்பில், தமிழக விடுதலைப் போராட்ட வீரா்களின் முகமூடி அணிந்து குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவம் பேரவையின் சாா்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு பேரவை அமைப்பாளா் விஸ்வநாதன் தலைமை தாங்கினாா். முன்னாள் பேரூராட்சித் தலைவா் திருவேங்கடம் முன்னிலை வகித்தாா்.

தலைநகா் புது தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக விடுதலைப் போராட்ட வீரா்களைக் கொண்ட அணிவகுப்பு வாகனத்துக்கு அனுமதி மறுத்த மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில், தமிழக சுதந்திரப் போராட்ட வீரா்களான வ.உ.சிதம்பரனாா், பாரதியாா், வேலுநாச்சியாா் ஆகியோா்களின் படங்களைக் கொண்ட முகமூடி அணிந்தவாறு தேசியக் கொடியேற்றி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

இதில், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் சமதா்மம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் சின்னசாமி. சி.பி.எம்.எல், மாவட்ட குழு உறுப்பினா் முருகேசன், ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட பொருளாளா் சிலம்பரசன், பேரவை ஒருங்கிணைப்பாளா்கள் ரத்தினம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT