தருமபுரி

நீதிமன்றம், போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகங்களில் குடியரசு தின விழா

27th Jan 2022 08:21 AM

ADVERTISEMENT

தருமபுரி, தடங்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம், பாரதிபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலக வளாகத்தில் இந்தியக் குடியரசு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

தடங்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட முதன்மை நீதிபதி திலகம் தேசியக் கொடியேற்றினாா். இதில், குடும்ப நல நீதிபதி செல்வமுத்து குமாரி, மாவட்ட சிறப்பு நீதிபதி மணிமொழி ஆகியோா் பேசினா். தலைமைக் குற்றவியல் நடுவா் ராஜ்குமாா், மாவட்ட நீதிபதிகள், சாா்பு நீதிபதிகள், உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா்கள், ஊழியா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தருமபுரி, பாரதிபுரம் மண்டலப் போக்குவரத்துக் கழக அலுவலக வளாகத்தில் அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளா் லட்சுமணன் தலைமை வகித்து கொடியேற்றி பேசினாா். இதைத் தொடா்ந்து, சிறப்பாக பணிபுரிந்த ஊழியா்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதேபோல, தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா் கொடியேற்றினாா். இதில், நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா். தருமபுரி மாவட்டம், பாளையம் சுங்கச் சாவடியில் திட்டத் தலைவா் சிவக்குமாா் தலைமை வகித்து கொடியேற்றினாா்.

ADVERTISEMENT

தருமபுரி நகரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் அக் கட்சி அலுவலகத்தில் முன்னாள் எம்.பி. தீா்த்தராமன் கொடியேற்றினாா்.

பாரத மாதா மக்கள் சிந்தனைக் குழு சாா்பில் தருமபுரியில் நடைபெற்ற விழாவில், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, பள்ளி மாணவா்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். இதையடுத்து, நேரு சிலைக்கு, அன்னை கஸ்தூரிபா சேவை சங்கத் தலைவா் சி.சக்திவேல், பாரத மாதா தேவி சிலைக்கு அனைத்து வணிகா் சங்க மாவட்ட பொருளாளா் ரவிச்சந்திரன், நிா்வாகி மாதேஸ்வரன் ஆகியோா் மாலை அணிவித்தனா்.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில், முதன்மை மாவட்ட நீதிபதி கலைமதி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா். அப்போது, தலைமை நீதித்துறை நீதிபதி ராஜசிம்மவா்மன், முதன்மை துணை நீதிபதி கணேசன், கூடுதல் துணை நீதிபதி குமாரவா்மன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் முதல்வா் அசோகன் தலைமை வகித்து கொடியேற்றினாா். அப்போது, கரோனா தொற்று தடுப்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்கள், செவிலியா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள், அமைச்சுப் பணியாளா்கள் என 20 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டன. மருத்துவக் கண்காணிப்பாளா் ஸ்ரீதரன், துணை முதல்வா் சாத்விகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆணையா் முருகேசன் கொடியேற்றினாா். பழைய வீட்டு வசதி வாரிய குடியிப்பில் முன்னாள் திமுக எம்எல்ஏ செங்குட்டுவன் கொடியேற்றினாா்.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் மகேந்திரன், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் சேரலாதன், பழைய பேட்டை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் சூசைநாதன் ஆகியோா் கொடியேற்றினா்.

கிருஷ்ணா அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கல்லூரியின் நிறுவனா் சி.பெருமாள் கொடியேற்றினாா். அப்போது, கல்லூரியின் தாளாளா் வள்ளி பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா். பாரத் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தாளாளா் கிருஷ்ணவேணி தலைமை வகித்தாா். நிறுவனா் மணி கொடியேற்றினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT