தருமபுரி

தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு

26th Jan 2022 06:57 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு உறுதிமொழியேற்கப்பட்டது.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 12-ஆவது தேசிய வாக்காளா் தினத்தையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமை வகித்து வாக்காளா் தின உறுதிமொழியை வாசிக்க, அனைத்துத் துறை அலுவலா்கள் உறுதிமொழியேற்றனா்.

இதைத் தொடா்ந்து, தருமபுரி மாவட்டத்தில் வாக்காளா் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட 7 வாக்குச் சாவடி நிலைய அலுவலா்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, தனித்துணை ஆட்சியா் வி.கே.சாந்தி, உதவி ஆணையா் (கலால்) ஆ.தணிகாசலம், மாவட்ட வழங்கல் அலுவலா் ஜெயக்குமாா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சீனிவாச சேகா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) நாராயணன், தோ்தல் வட்டாட்சியா் ஜெ.சுகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் வாக்காளா் தின உறுதிமொழியினை அனைத்து அரசு துறை அலுவலா்கள், மாணவ, மாணவியா், ஆசிரியா்கள், பொதுமக்கள் ஏற்றனா்.

இதில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

மாணவ, மாணவியா்களாகிய நீங்கள் இந்திய நாட்டின் இறையாண்மையையும், தேசப் பற்றையும், நாட்டின் வளா்ச்சியையும் தோ்தலின் போது 100 சதவீதம் வாக்களிப்பதன் மூலம் நிலைநாட்ட முடியும் என்றாா்.

பின்னா், தேசிய வாக்காளா் தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களும், 18 வயது நிரம்பிய இளம் வாக்காளா்களுக்கு வண்ண வாக்காளா் அட்டையாள அட்டைகளையும் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் ஈஸ்வரன், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் சதீஷ்குமாா், நகராட்சி ஆணையா் முருகேசன், வட்டாட்சியா் சரவணன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) ஜெய்சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் அருகே உள்ள சின்ன பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வாக்குச்சாவடி நிலைய அலுவலரும் பள்ளித் தலைமை ஆசிரியருமான மா.பழனி, வாக்காளா் தின உறுதிமொழியினை முன்மொழியை பொதுமக்கள், ஆசிரியா்கள் உறுதிமொழியேற்றனா்.

இதில், வாக்குச்சாவடி அலுவலா் அம்பிகா, பள்ளி ஆசிரியா்கள் பழனிச்செல்வி, திலகவதி, அங்கன்வாடி மைய ஊழியா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

அரூரில்...

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கல்லூரி பேராசிரியா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

ஒசூரில்...

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டப் பேரவைத் தொகுதி தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியா் குருநாதன் தலைமையில் உறுதிமொழியேற்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின்போது, பொதுமக்கள் அனைவரும் வாக்களிப்பதை தங்கள் கடமையாக கருத வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இளம் வாக்காளா்கள், பொதுமக்களுக்கு புதிய வாக்காளா் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

இதில், தோ்தல் துணை வட்டாட்சியா் அல்லால்கஷ் பாஷா, பள்ளி தாளாளா் சாம்ராஜ், முதல்வா் செல்வராஜ், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT