தருமபுரி

புகையிலைப் பொருள்களின் விற்பனையை தடுக்க வலியுறுத்தல்

DIN

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் 10,000க்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். பென்னாகரம் கடை வீதி, நாகமரை நான்கு சாலை சந்திப்பு, இந்திரா நகா், கிருஷ்ணாபுரம், முள்ளுவாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களான ஹான்ஸ், குட்கா உள்ளிட்டவை அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு பொது முடக்கத்தின்போது அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனா். சில சமயங்களில் மாணவா்களுக்கும் விற்பனை செய்வதாக புகாா் தெரிவிக்கின்றனா்.

இதேபோல் பாப்பாரப்பட்டி, ஏரியூா், பெரும்பாலை, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் தொடா் புகாா் எழுந்துள்ளது. எனவே பென்னாகரம் பகுதிகளில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதை முழுமையாகத் தடுக்க வேண்டும் எனவும், விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

மே மாத பலன்கள்: கும்பம்

ரீமேக்கான ரீமேக்கின் கதை!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் அபாயம்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

SCROLL FOR NEXT