தருமபுரி

ஸ்ரீ கரிய பெருமாள் வெங்கட்ரமண சுவாமி கோயிலில் பொங்கல் விழா

DIN

சித்தேரி மலையில் ஸ்ரீ கரிய பெருமாள் வெங்கட்ரமண சுவாமி கோயிலில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது அழகூா் ஜெக்கம்பட்டி கிராமம். இந்த மலை கிராமத்தில் உள்ள ஸ்ரீ கரிய பெருமாள் வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மலைவாழ் பழங்குடியின மக்கள் , பொங்கல் வைத்து சுவாமியை வழிபடுகின்றனா். இந்த ஆண்டில் அழகூா் ஜெக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு, பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் சுவாமியை வணங்கினா். சுவாமி ஊா்வலத்தின் போது பெண்கள் கும்மிப் பாடல்களை பாடினா்.

பொங்கல் விழாவில் கருமந்துறை, வத்தல்மலை, கொல்லிமலை, ஜவ்வாது மலை, கள்ளக்குறிச்சி, ஏற்காடு உள்ளிட்ட மலை கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின சமூக மக்கள் பலா் கலந்துகொண்டனா். விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT