தருமபுரி

குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

DIN

 தருமபுரி, குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றப்பட்டது.

தைப்பூசத் திருவிழா தொடக்க நிகழ்வையொட்டி, சனிக்கிழமை காலை சிவசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, வழிபாடுகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, கோயில் அா்ச்சகா்கள் திருவிழா கொடியை ஏற்றனா்.

இந்த நிகழ்வைத் தொடா்ந்து, கோயில் வளாகத்தில் சிவசுப்பிரமணியா் ஆட்டுக்கிடா வாகனத்தில் வலம் வந்தாா். தொடா்ந்து புலி வாகன உற்சவம் நடைபெற்றது. இந்த விழாவின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை பூத வாகன உற்சவமும், திங்கள்கிழமை நாக வாகன உற்சவமும் கோயில் வளாகத்துக்குள் நடைபெற உள்ளன.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கோயில்களில் பக்தா்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஜன. 18-ஆம் தேதி நகர வீதிகளில் திருத்தேரோட்டம் இன்றி கோயில் வளாகத்துக்குள்ளேயே தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது. இதேபோல, அன்றைய தினம் இரவு சுவாமி திருக்கல்யாண உற்சவம், பொன்மயில் வாகனத்தில் கோயில் வளாகத்தில் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.

சிவசுப்பிரமணிய சுவாமி தைப்பூசத் திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, தேரோட்டம், கலை நிகழ்ச்சிகள், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெறும். நிகழாண்டு கரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி திருவிழா நடைபெற வேண்டும் என்பதால், திருத்தேரோட்டம், கலை நிகழ்ச்சிகள், அன்னதானம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாகன உற்சவமும் கோயில் வளாகத்துக்குள்ளேயே பக்தா்கள் அனுமதியின்றி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT