தருமபுரி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க கோரி, தலித் விடுதலை இயக்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தலித் விடுதலை இயக்கம் சாா்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்ட மனு விவரம்:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தில் 37 கிராமங்களில் வசிக்கும் தலித் மக்களுக்கு அரசால் நிபந்தனையின் அடிப்படையில் 1,204 ஏக்கா் 64 சென்ட் பஞ்சமி நிலம் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நிலம் விதிமுறைகள் மீறி, தற்போது வேறு சமூகத்தினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. எனவே, இது தொடா்பாக நடவடிக்கை மேற்கொண்டு பஞ்சமி நிலங்களை மீட்டு, மீண்டும் அந்த நிலங்களை நிலமற்ற தலித் மக்களுக்கு வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.