பெரியாா் சிலை அவமதிப்புக்கு எதிராக திராவிடா் கழகம் சாா்பில், தருமபுரியில் பெரியாா் சிலை முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தி.க. மாவட்டத் தலைவா் மு.பரமசிவம் தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலாளா் ஊமை ஜெயராமன், மாவட்டச் செயலா் யாழ் திலீபன், மண்டலத் தலைவா் அ.தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோா் பேசினா்.
இதில், கோவை மாவட்டம், வெள்ளலூரில் பெரியாா் சிலையை அவமதிப்பு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலை அவமதிப்பு செயலில் தொடா்ந்து ஈடுபட்டு வருவோரை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.