தருமபுரி

தருமபுரியில் இதுவரை 2.89 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது

12th Jan 2022 07:47 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முழுநீள கரும்புடன் கூடிய 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு இதுவரை 2,89,680 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என மாநில வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி, செட்டிக்கரை, ராஜாபேட்டை ஆகிய நியாயவிலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி மற்றும் அப்பொருள்களின் தரம் குறித்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கி அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கீழ் 462 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 568 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும், நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 41 நியாயவிலைக் கடைகளும் என மொத்தம் 1,071 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இக் கடைகளில் பயன்பாட்டிலுள்ள 4,60,825 அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 718 குடும்பங்களுக்கும் என மொத்தம் 4,61,543 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு துணி பையுடன் கூடிய 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படும் 21 பொருள்கள் சரியாக இருக்கிா என்பதையும், அப்பொருள்கள் அனைத்தும் தரமானதாக உள்ளதா என்பதையும், எடை அளவு குறையாமலும் வழங்கப்படுகிா என்பதையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

மாவட்டத்தில் 4,61,543 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி கடந்த ஜன. 4-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில், ஜன. 10-ஆம் தேதி வரை 2,89,680 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சமூக இடைவெளியை பின்பற்றி, முகக் கவசம் அணிந்து, விநியோகம் செய்யும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதேபோல, 45,751 விலையில்லா வேட்டிகளும், 46,169 விலையில்லா சேலைகளும் என மொத்தம் 91,920 விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

இந்த ஆய்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சு.ராமதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலா் ஜெ.ஜெயக்குமாா், முன்னாள் எம்எல்ஏக்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, பி.என்.பி. இன்பசேகரன், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT