தருமபுரி

அகவிலைப்படி வழங்கிய தமிழக அரசுக்கு ஓய்வுபெற்ற அலுவலா்கள் நன்றி தெரிவிப்பு

12th Jan 2022 07:47 AM

ADVERTISEMENT

அகவிலைப்படி 14 சதவீதம் வழங்கிய தமிழக அரசுக்கு, ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற அலுவலா் சங்க தருமபுரி மாவட்ட குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் அ.மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. செயலாளா் பி.கணேசன் வரவேற்றாா். பொருளாளா் பெ.ஜெயபால் வரவு-செலவு அறிக்கை வாசித்தாா்.

இக்கூட்டத்தில், கடுமையான நிதி நெருக்கடியில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியா் நலன் கருதி 14 சதவீதம் அகவிலைப்படி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ. 3 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும், ஓய்வூதியா் உயிரிழக்கும் அன்றைய தினமே அவா்களது குடும்பத்துக்கு ரூ. 25,000 மற்றும் குடும்பநல பாதுகாப்பு நிதி ரூ. 50,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT