எடை அளவைகளை மறு முத்திரையிட வேண்டும் என தொழிலாளா் நலத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, தொழிலாளா் நல உதவி ஆணையா் வெங்கடாசலபதி (அமலாக்கம்) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி நகரம், நல்லம்பள்ளி, வாரச்சந்தை, அரூா் பகுதிகளில் பல்வேறு இடங்களில் காய்கறிக் கடைகள், பழக் கடைகள் உள்ளிட்ட கடைகளில் எடைஅளவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின்போது, உரிய காலத்தில் மறு முத்திரையிடப்படாத, 18 மேஜை தராசுகள், 65 எடைகற்கள், 17 ஊற்றல் அளவைகள், 34 மின்னணு தராசு, 2 மேடைத் தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
எனவே, வணிகா்கள் பயன்படுத்தும் எடை அளவைகளுக்கு உரிய காலத்துக்குள் மறு முத்திரை பெற்று, அவற்றைப் பயன்படுத்த வேண்டும். அதற்கான சான்று கடைகளில் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைக்கப்படவில்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என்றாா்.