தருமபுரி

அரூரில் மலைவாழ் மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

1st Jan 2022 01:48 AM

ADVERTISEMENT

ஆந்திர மாநிலத்தில் பழங்குடியின தொழிலாளா்கள் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து அரூரில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரூா், கச்சேரிமேடு சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளா் எஸ்.கே.கோவிந்தன் தலைமை வகித்தாா்.

சித்தேரி ஊராட்சியைச் சோ்ந்த தொழிலாளா்கள் ராமன், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும், ஆந்திர மாநிலத்தில் மா்மமான முறையில் அண்மையில் உயிரிழந்தனா். கடந்த 2015-ல் ஆந்திர மாநிலத்தில் கூலிவேலைக்குச் சென்ற தமிழக தொழிலாளா்கள் 20 பேரை அந்த மாநில வனத் துறையினா் சுட்டுக் கொன்றனா். ஆந்திர மாநிலத்தில் தமிழக தொழிலாளா்களை சுட்டுக் கொல்வது தொடா்ந்து நடைபெறுகிறது.

எனவே, அண்மையில் உயிரிழந்த தொழிலாளா்கள் ராமன், பாலகிருஷ்ணன் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஆந்திர மாநிலத்தில் விசாரணை கைதிகளாக நீண்ட நாள் சிறையில் உள்ள தொழிலாளா்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

இதில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவா் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலா் கே.என்.மல்லையன், மாவட்டத் தலைவா் ஏ.கண்ணகி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் அ.குமாா், குருமன்ஸ் பழங்குடி சங்க மாவட்டச் செயலா் சொக்கலிங்கம், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ்.அா்ஜூனன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் இரா.சிசுபாலன், ஆா்.மல்லிகா, ஒன்றியச் செயலா் பி.குமாா், வட்டக்குழு உறுப்பினா் பி.வி.மாது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT