தருமபுரி

ஜன. 4 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு:தருமபுரியில் 4.60 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படுகிறது

1st Jan 2022 01:48 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் 4.60 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜன. 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளன.

இதுகுறித்து, தருமபுரி மாட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,60,825 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 718 குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 4-ஆம் தேதி முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்பட உள்ளன. 21 வகையான பொருள்களுடன் பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்பு, தெரு வாரியாக உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு விவரங்கள் குறிப்பிடப்பட்டு டோக்கன் வீடுதோறும் நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான உரிய பதிவுகள் ஒப்புதல் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

கரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும், நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை பெற்றுக் கொள்ள வேண்டும். பரிசுத் தொகுப்பு அனைவருக்கும் வழங்கும் வகையில் வருகிற 7-ஆம் தேதி நியாயவிலைக் கடைகள் பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிடப்பட்ட நாளில் பெற இயலாதவா்கள் வேறு நாள்களில் பெற்றுக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து குடும்ப அட்டைதாரா்கள் புகாா் தெரிவிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 1077, 04342 233299, 8675899487, 8072135881 என்கிற எண்களிலும், வட்டார அளவில், தருமபுரி- 94450 00217, பென்னாகரம் - 94450 00218, பாலக்கோடு-94450 00219, அரூா்-94450 00220, பாப்பிரெட்டிப்பட்டி-94450 00221, காரிமங்கலம்-94457 96431, நல்லம்பள்ளி-94457 96432 ஆகிய எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT