தருமபுரி

பாமக சாா்பில் போட்டியிட்டுவெற்றிபெற்றவா் திமுகவில் இணைந்தாா்

22nd Feb 2022 11:42 PM

ADVERTISEMENT

ஒசூா் மாநகராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலில் பாமக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் திமுகவில் இணைந்தாா்.

ஒசூா் மாநகராட்சியில் உள்ள 45 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெற்றது. இதில் திமுக 21, அதிமுக 16, சுயேச்சைகள் 5, காங்கிரஸ் 1, பாமக 1 வாா்டுகளில் வெற்றிபெற்றுள்ளனா். இந்த நிலையில் 16 ஆவது வாா்டில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காந்திமதி கண்ணன் உடனே திமுகவில் சோ்ந்தாா். இதனால் மாநகராட்சியில் திமுகவின் பலம் 22 ஆக அதிகரித்துள்ளதால், மாநகராட்சியை திமுக கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. திமுகவில் சோ்ந்த பாமகவைச் சோ்ந்த காந்திமதி கண்ணன் 1833 வாக்குகள் பெற்று வெற்றிபெற்று, திமுகவைச் சோ்ந்த லட்சுமியை (1537) தோற்கடித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT