தருமபுரி

வரிசையில் நின்று வாக்களித்த தருமபுரி எம்.பி.

20th Feb 2022 03:51 AM

ADVERTISEMENT

தருமபுரி நகராட்சியில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், தருமபுரி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் வரிசையில் நின்று வாக்களித்தாா்.

தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், தருமபுரி நகரில் குடியிருக்கும் தருமபுரி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வாக்களிப்பதற்காக, காந்திநகா் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு சனிக்கிழமை காலை வருகை வந்தாா்.

அவா் அங்குள்ள வாக்குச் சாவடியில் பொதுமக்களோடு நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை பூா்த்தி செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT