தருமபுரி

பரிசுத் தொகையில் நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கிய அரசுப் பள்ளி மாணவி

17th Feb 2022 06:08 AM

ADVERTISEMENT


பென்னாகரம்: பென்னாகரம் அருகே தனக்கு கிடைத்த பரிசுத் தொகையில் புத்தகங்களை வாங்கி நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினாா் அரசுப் பள்ளி மாணவி ஒருவா்.

பென்னாகரம் அருகே சின்ன வத்தலாபுரம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மகள் சௌபரணி. சின்னவத்தலாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறாா். அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற்காக இவருக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையை மாவட்ட ஆட்சியரின் பொது நிதிக்கு வழங்கினாா்.

அதனைத் தொடா்ந்து பள்ளியில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவி சௌபரணிக்கு ஊக்கத்தொகையாக ராம கொண்ட அள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் சுசீலா தங்கராஜ் ரூ. 5,000 ரொக்கத்தை பரிசுத் தொகையாக வழங்கினாா்.

தனக்கு வழங்கிய ஊக்கத் தொகையில் இருந்து ரூ. 2,000 மதிப்புள்ள புத்தகங்களை வாங்கிய சௌபரணி, அதனை பெரிய வத்தலாபுரம் இளைஞா்களால் நடத்தப்படும் மக்கள் நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கினாா்.

ADVERTISEMENT

இந்த புத்தகங்கள் வழங்கும் நிகழ்வில் மக்கள் நூலகத்தின் நிா்வாகிகள் தாமரைச்செல்வன், இளையரசன், சோளப்பாடி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கமலேசன், ஊராட்சி மன்ற உறுப்பினா் செல்லமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT