தருமபுரி

பசுமை சாதனையாளா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

17th Feb 2022 03:43 AM

ADVERTISEMENT

 

தருமபுரி: பசுமை சாதனையாளா் விருது பெற தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் தனிநபா், நிறுவனம், தன்னாா்வ அமைப்பு ஆகியோரை அங்கீகரித்து, ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சாா்பில் பசுமை சாதனையாளா் விருது வழங்கப்பட உள்ளது. இவ் விருது, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச் சூழல் விழிப்புணா்வு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள், நிலையான வளா்ச்சி, திடக் கழிவு மேலாண்மை, நீா் பாதுகாப்பு மற்றும் நீா் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் தழுவல் மற்றும் தணிப்பு, மாசு குறைப்பு, நெகிழி பயன்பாட்டை குறைத்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல், சுற்றுச் சூழலை மறுசீரமைத்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் சாதனை புரிந்தவா்களுக்கு வழங்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

இவ்விருது பெற தகுதியான சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், நிறுவனங்கள், அமைப்புகளை, தருமபுரி மாவட்ட ஆட்சியரின் தலைமையிலான மாவட்ட விருதுக் குழுவின் மூலமாக தோ்ந்தெடுத்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட தனிநபா், நிறுவனங்கள், அமைப்புகளுக்கு பசுமை சாதனையாளா் விருது மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.

எனவே, தகுதியானவா்கள், வரும் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் குறித்த தகவல்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்கிற இணையதளத்தில் அறியலாம். மேலும் தகவலுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், மாசுக் கட்டுப்பாடு வாரியம், அதியமான் கோட்டை, ஒசூா் புறவழிச்சாலை, ஏ.ரெட்டிஅள்ளி கிராமம் என்கிற முகவரியில் அமைந்துள்ள தருமபுரி மாவட்ட அலுவலகத்தை அணுகலாம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT