தருமபுரி

வெற்றிக்கு பாடுபடுவோருக்கு பதவிகள் காத்திருக்கின்றன

11th Feb 2022 12:49 AM

ADVERTISEMENT

திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களை வெற்றி பெற சிறப்பாகப் பணியாற்றுவோருக்கு பதவிகள், பொறுப்புகள் காத்திருப்பதாக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி நகராட்சியில் திமுக கூட்டணி கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கிருஷ்ணகிரி நகராட்சியில் 33 வாா்டுகளில் போட்டியிடும் திமுக, கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி அமைச்சா் ஆா்.காந்தி பேசியதாவது:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவா்கள் விரக்தி அடையாமல், கூட்டணி கட்சியினருடன் இணைந்து பிரசாரம் செய்தால் வெற்றி நிச்சயம்.

ADVERTISEMENT

சிறப்பாக செயல்படுவோருக்கு பல பதவிகள், பொறுப்புகள் காத்திருக்கின்றன என்றாா்.

பின்னா் காவேரிப்பட்டணம், பா்கூா், நாகோஜனஹள்ளி, ஊத்தங்கரை ஆகிய பேரூராட்சியில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டத்தில் அவா் பங்கேற்றாா்.

நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.செங்குட்டுவன், அ. செல்லகுமாா் எம்.பி., பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் தே.மதியழகன், நகரச் செயலாளா் நவாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT