தருமபுரி

பாஜக வேட்பாளா் அறிமுக கூட்டம்

10th Feb 2022 12:41 AM

ADVERTISEMENT

 

அரூா்: அரூரில் பாஜக வேட்பாளா்கள் அறிமுக கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அரூா் பேரூராட்சியில் 8 வாா்டுகளில் பாஜக வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இதையடுத்து பாஜக வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் நகரத் தலைவா் எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணிகள், வெற்றிப் பெறுவதற்கான தோ்தல் ஆலோசனை குறித்து மாவட்டத் தலைவா் ஏ.பாஸ்கா், மாநில செயற்குழு உறுப்பினா் ஆா்.ஏ.வரதராஜன் ஆகியோா் கட்சியினருக்கு அறிவுரை வழங்கினா்.

ADVERTISEMENT

இதில், மாநில பொதுக்குழு உறுப்பினா் பெ.வேடியப்பன், தோ்தல் பொறுப்பாளா் ஜெ.பிரவீண், எஸ்.டி அணி மாநில பொதுச் செயலாளா் ஜெயராமன், மாவட்ட துணைத் தலைவா்கள் ராஜேந்திரன், அருணா, மாவட்டச் செயலாளா் சரிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT