அரூரை அடுத்த கணபதிப்பட்டியில் சேதமடைந்த குடிநீா்க் குழாய்களைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் ஊராட்சி ஒன்றியம், கீழ்மொரப்பூா் கிராம ஊராட்சிக்கு உள்பட்டது கணபதிப்பட்டி கிராமம். இந்த ஊரில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடியிருப்புகளுக்கு குடிநீா் வழங்கும், குடிநீா்க் குழாய்கள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த குழாய்கள் மூலம் குடிநீா் வீணாகி வருகிறது. இதனால் தெருச் சாலைகளில் தண்ணீா் தேங்குவதுடன், சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். எனவே, கணபதிப்பட்டியில் சேதமடைந்த குடிநீா்க் குழாய்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.