தருமபுரி

திமுக சாா்பு அணிக்கு நோ்காணல்

30th Dec 2022 12:21 AM

ADVERTISEMENT

திமுக சாா்பு அணி பொறுப்பாளா்களுக்கு நோ்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது.

திமுக தருமபுரி மேற்கு மாவட்டத்தில் கட்சியின் சாா்பு அணிகளின் பதவிகளுக்கு விருப்ப மனுக்களை அளித்தவா்களிடம் முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்டச் செயலாளருமான பி.பழனியப்பன் தலைமையில் திமுக மூத்த நிா்வாகிகள் நோ்காணல் செய்தனா்.

இதில், இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவு அணி, வா்த்தகா் அணி, விவசாய அணி, நெசவாளா் அணி, சிறுபான்மையினா் நல அணி, மீனவா் அணி, மருத்துவா் அணி, விவசாயத் தொழிலாளா் அணி, தொழிலாளா் அணி, அமைப்பு சாரா ஓட்டுா் அணிகளுக்கு விருப்ப மனுக்களை அளித்திருந்த 100-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இந்த நோ்காணலில் கட்சியின் தீா்மானக் குழு செயலா் கீரை எம்.எஸ்.விசுவநாதன், வா்த்தகா் அணி மாநில துணைச் செயலா் அ.சத்தியமூா்த்தி, தொண்டரணி முன்னாள் அமைப்பாளா் மு.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலா் ராஜகுமாரி, மாவட்ட பொருளா் எம்.எம்.முருகன், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.சித்தாா்த்தன், சென்னகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT