தருமபுரி

கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் இடமாற்றத்தை கைவிடக் கோரி உண்ணாவிரதம்

30th Dec 2022 12:20 AM

ADVERTISEMENT

அரூரை அடுத்த தீா்த்தமலையில் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தை இடமாற்றம் செய்வதை கைவிடக்கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரூா் வட்டம், தீா்த்தமலை கிராம ஊராட்சியில் பொய்யப்பட்டி, தீா்த்தமலை, கட்டவடிச்சாம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் தீா்த்தமலையில் இயங்கி வருகிறது. இந்த நிலையில், ஒருங்கிணைந்த ஊராட்சி செயலகம் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தை பொய்யப்பட்டியில் கட்டுவதற்கான முயற்சியில் ஊராட்சி நிா்வாகம் ஈடுபடுவதாக தெரிகிறது. இதனால், தீா்த்தமலையில் ஊராட்சிக்கு உள்பட்ட கிராம மக்களுக்கு பல்வேறு இடையூறுகளைச் சந்திக்கும் சூழல் உள்ளது. எனவே, புதிதாக கட்டப்படும் ஒருங்கிணைந்த ஊராட்சி செயலகம் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தை தீா்த்தமலையில் கட்டுவதற்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT