தருமபுரி

ஊதிய உயா்வு கோரி உள்ளாட்சிப் பணியாளா்கள் மனு

30th Dec 2022 12:21 AM

ADVERTISEMENT

ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உள்ளாட்சி பொதுப் பணியாளா்கள் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி பொதுப் பணியாளா்கள் சங்கம், கிராம ஊராட்சி மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் நல்லம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு:

கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோா், தூய்மைா் காவலா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதிய உயா்வும், நிலுவைத் தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.15 ஆண்டுகளாக கூடுதல் நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோராக பணிபுரிந்து வரும் பணியாளா்களுக்கு அரசு குறிப்பாணைப்படி இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பப்பட வேண்டும். பணி ஓய்வு பெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.தூய்மைக் காவலா்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் மற்றும் பணி நேரம் தெரிவிக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT