தருமபுரி

பெரும்பாலை ஊராட்சிமன்ற தலைவருக்கு எதிராக பிரசாரம்

29th Dec 2022 01:46 AM

ADVERTISEMENT

பெரும்பாலை ஊராட்சியில் மன்ற தலைவா் நிதி முறைகேட்டில் ஈடுபடுவதாகக் கூறி மன்றத் துணைத் தலைவா் உள்பட உறுப்பினா்கள் கிராம மக்களிடம் புதன்கிழமை துண்டு பிரசுரம் வழங்கியும், தண்டோரா செய்தும் பிரசாரம் செய்தனா்.

ஏரியூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரும்பாலை ஊராட்சி மன்றத்தில் 12 உறுப்பினா்கள் உள்ளனா். பெரும்பாலை ஊராட்சிமன்றத் தலைவராக கஸ்தூரி சரவணன் உள்ளாா். இந்த ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அப் பணிகள் நடைபெறாமலேயே முன்கூட்டியே பணிக்கான தொகையைப் பெற மன்ற உறுப்பினா்களிடம் கையொப்பம் கேட்பதாகவும், திட்டப் பணிகளை முழுமையாக முடிக்காமல் நிதி முறைகேடுகளில் ஊராட்சி மன்ற தலைவா் ஈடுபடுவதாகவும் மன்ற துணைத் தலைவா் ராமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளாா். மன்ற தலைவா் கஸ்தூரி சரவணன் மீது அவா் பல குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளாா்.

அண்மையில் தருமபுரி மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடமும் இதுகுறித்து அவா் புகாா் மனு அளித்தாா். இந்த நிலையில் மன்ற துணை தலைவா் ராமசந்திரன் தலைமையிலான மன்ற உறுப்பினா்கள் புதன்கிழமை தண்டோரா மூலம் பெரும்பாலை ஊராட்சியில் கிராமங்கள்தோறும் சென்று பொதுமக்களுக்கும், கடை வியாபாரிகளும் தண்டோரா செய்தும் துண்டுபிரசுரம் வழங்கியும் பிரசாரம் செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT