பொம்மிடி வட்டாரத்தில் திருட்டு வழக்கில் தொடா்புடைய 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பொம்மிடி பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடைபெறுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அரூா் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையில், தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
இந்த விசாரணையில் திருட்டு சம்பவத்தில் தொடா்பு இருப்பதாக சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மகன் பெரியான் (37), அண்ணாமலை மகன் காா்த்திக் (21), கல்லு வெள்ளை மகன் கோவிந்தராஜ் (35), சேத்து மணி மகன் மணி (20), சின்னசாமி மகன் சக்திவேல் (26) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து 7 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.