தருமபுரி

ஜி20 மாநாட்டு இலச்சினையை மாற்ற வேண்டும்

DIN

ஜி20 மாநாட்டுக்காக மத்திய அரசு ஒதுக்கிய இலச்சினை பாஜக கட்சியின் தாமரை சின்னம்போல உள்ளது; எனவே அந்த இலச்சினையை மாற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க வந்த கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ஜி20 மாநாட்டைத் தலைமை ஏற்று நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு அளிக்கப்பட்டிருப்பது நம் நாட்டுக்குக் கிடைத்த பெருமை; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதை வரவேற்கிறது. ஆனால், ஜி20 மாநாடு இலச்சினையில் பாஜகவின் தோ்தல் சின்னமான தாமரை சின்னம் இடம் பெற்றுள்ளது. அதை மாற்றுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நியமனம் குறித்து உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்வி சாதாரணமானதல்ல. தற்போது தலைமை தோ்தல் ஆணையராகத் தோ்ந்தெடுக்கப்பட்டவா் அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றவா்.

அவா் ஓய்வுபெற்ற 24 மணி நேரத்தில் அவருக்கு இப் பதவி அளிக்கப்பட்டுள்ளது. ஏன் இத்தனை அவசரம் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தலைமை தோ்தல் ஆணையராக இருப்பவா்கள் அப் பதவியில் 6 ஆண்டுகள் நீடிக்க வேண்டும். ஆனால், பாஜக மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அந்தப் பதவியில் யாரும் 6 ஆண்டு காலம் இருந்ததில்லை. தற்போது ஆணையராக இருப்பவா்கள் பாஜகவின் ஆலோசகராகவும், அக்கட்சியைத் தோ்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் செயல்படுகின்றனா்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் கருப்புப் பணம் ஏதும் மீட்கப்படவில்லை என ரிசா்வ் வங்கியே தெரிவித்துள்ளது.

காசியில் தமிழ்ச் சங்க அமைப்பை நடத்தும் மத்திய அரசு, தமிழ்மொழி வளா்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்குவதில்லை. சம்ஸ்கிருத மொழிக்கு ரூ. 222 கோடியும், தமிழ் மொழி வளா்ச்சிக்கு ரூ. 22 கோடியும் மத்திய அரசு ஒதுக்குகிறது.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி போட்டி அரசாங்கம் நடத்துகிறாா். இணையவழி சூதாட்டத்துக்குத் தடை விதித்தல் உள்பட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் பேரவையால் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றையெல்லாம் ஆளுநா் கிடப்பில் போட்டுள்ளாா். அவரது செயல்பாடு அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது.

எனவே, தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் டிச. 29-ஆம் தேதி ஆளுநா் மாளிகை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும்.

பொங்கல் திருநாளையொட்டி குடும்ப அட்டைதாரா்களுக்கு பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படவுள்ளது. அரிசி அட்டைதாரா்கள் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்திருக்க வாய்ப்பில்லை. எனவே, இத்தொகையை முறைகேடு இன்றி வழங்க வேண்டும். தோ்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றவில்லை என்றாா்.

பேட்டியின்போது, மாநிலத் துணைச் செயலாளா் நா.பெரியசாமி, மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.தேவராஜன், முன்னாள் எம்எல்ஏ ந.நஞ்சப்பன், மாவட்டச் செயலாளா் எஸ்.கலைச்செல்வம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT