தருமபுரி

88 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு

DIN

தருமபுரி மாவட்டத்தில் வீட்டு வசதி, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில், கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் 88 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.

சென்னை, தலைமை செயலகத்தில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் புதிதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து, பயனாளிகளுக்குக் குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, தருமபுரி மாவட்டத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், தருமபுரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் 60 பயனாளிகளுக்கு தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு

ரூ. 2.10 லட்சம் மானியம் வீதம் ரூ. 1.26 கோடி மானிய நிதி உதவியுடன் புதிய வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளையும், தருமபுரி கோழிமேக்கனூரில் ரூ. 14.02 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் 28 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகள் வழங்குதல் என மொத்தம் 88 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி பொறியாளா் பாவேந்தன், இளநிலை பொறியாளா் சிலம்பரசன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT