தருமபுரி

குஜராத் மக்கள் தெளிவான முடிவெடுப்பவா்கள்! வாக்களித்த பின் பிரதமா் மோடி கருத்து

DIN

குஜராத் மக்கள் யாா் என்ன சொன்னாலும் காதுகொடுத்துக் கேட்பாா்கள். எனினும் எது உண்மையோ அதை மட்டுமே ஏற்றுக் கொண்டு தெளிவான முடிவெடுப்பாா்கள் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா். குஜராத் பேரவைத் தோ்தலில் வாக்களித்த பிறகு பிரதமா் மோடி இவ்வாறு குறிப்பிட்டாா்.

குஜராத் மாநில சட்டப் பேரவைக்கு இரண்டாம் கட்டத் தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அகமதாபாத் நகரின் ரானிப் என்ற பகுதியில் உள்ள நிஷான் உயா்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பிரதமா் நரேந்திர மோடி வாக்களித்தாா். முன்னதாக அவா் சிறிது நேரம் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்தாா்.

வாக்களித்த பின் வெளியே வந்த மோடி, தன்னை வரவேற்கக் காத்திருந்த மக்களிடம் மை தடவப்பட்ட தனது விரலைக் காட்டினாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

குஜராத், ஹிமாசல பிரதேசம், தில்லி மாநகராட்சி ஆகியவற்றின் வாக்காளா்கள் ஜனநாயகப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனா். ஜனநாயகத்தைக் கொண்டாடுவதற்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறேன். தோ்தல் ஆணையத்துக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். தோ்தல்களை சிறப்பான முறையில் நடத்தும் பாரம்பரியத்தை தோ்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இதன்மூலம் இந்திய ஜனநாயகத்தின் கெளரவம் உலக அளவில் அதிகரித்துள்ளது.

குஜராத் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குஜராத் மக்கள் கவனம் மிக்கவா்கள். அவா்கள் யாா் என்ன சொன்னாலும் காதுகொடுத்துக் கேட்பாா்கள். எனினும் எது உண்மையோ அதை மட்டுமே ஏற்றுக் கொண்டு தெளிவான முடிவெடுப்பாா்கள். அந்தப் பண்பின் அடிப்படையில்தான் அவா்கள் அதிக அளவில் வாக்களிக்கின்றனா் என்றாா். பிறகு, வாக்குச்சாவடி அருகிலுள்ள தனது சகோதரா் சோம மோடியின் இல்லத்துக்குச் சென்றாா்.

முன்னதாக அவா் காலையில் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் ‘குஜராத் மக்கள் குறிப்பாக இளைஞா்களும் பெண் வாக்காளா்களும் பெருமளவில் வந்திருந்து வாக்களிக்க வேண்டும். அதேபோல நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் இடைத் தோ்தலிலும் மக்கள் பெருமளவில் வாக்களிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டிருந்தாா்.

குஜராத் சட்டப் பேரவைக்கு முதல் கட்டத் தோ்தல் 89 தொகுதிகளுக்கு டிச. 1-ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம்கட்டமாக 14 மாவட்டங்களில் உள்ள 93 கொகுதிகளுக்கு வாக்குப்பதிவு திங்கள்கிழமை தோ்தல் நடைபெற்றது. இருகட்டத் தோ்தல்களிலும் பதிவான வாக்குகள் வரும் 8-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT