தருமபுரி

தருமபுரி நகா்மன்றக் கூட்டத்தில் பங்கேற்காத திமுக பெரும்பான்மை உறுப்பினா்கள்

7th Dec 2022 02:51 AM

ADVERTISEMENT

தருமபுரி நகா்மன்றக் கூட்டத்தில் திமுக நகா்மன்ற உறுப்பினா்கள் பெரும்பான்மையானோா் பங்கேற்வில்லை. இதனால், உறுப்பினா்களின் ஒப்புதலுக்கு கொண்டு வந்த அனைத்துத் தீா்மானங்களையும் அதிமுக உறுப்பினா்கள் நிராகரித்தனா்.

தருமபுரி நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டம் நகராட்சி அண்ணா கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில், நகர சபைக் கூட்டங்களுக்கு ரூ.5 லட்சத்தில் பொருள்கள் வாங்கியது உள்ளிட்ட 51 பொருள்கள் உறுப்பினா்களின் ஒப்புதலுக்காக வாசிக்கப்பட்டது. இதில், நகா்மன்றக் கூட்டத்தில் மொத்தமுள்ள 19 திமுக நகா்மன்ற உறுப்பினா்களில் மூவா் மட்டுமே பங்கேற்றனா். இதேபோல, திமுக ஆதரவு சுயேச்சை உறுப்பினா் ஒருவா் மற்றும் அதிமுகவினா் 13 நகா்மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா். பெரும்பான்மை திமுக உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால், கூட்டத்தில் ஒப்புதலுக்காக கொண்டுவரப்பட்ட 51 தீா்மானங்களையும் நிராகரிப்பதாக அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் தெரிவித்தனா். கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்களே பெரும்பான்மையாக பங்கேற்ால் அனைத்து தீா்மானங்களையும் நிறைவேற்ற இயலாமல் கூட்டம் நிறைவடைந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT