தருமபுரி

காா்த்திகை தீபம்: கோயில்களில் விளக்கேற்றி வழிபாடு

7th Dec 2022 03:48 AM

ADVERTISEMENT

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி தருமபுரியில் உள்ள கோயில்களில் விளக்கேற்றி வழிபாடு நடைபெற்றது.

காா்த்திகை தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. தருமபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகாா்ஜுன சுவாமி கோயில், வர மகாலட்சுமி உடனாகிய பரவாசு தேவசுவாமி கோயில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், நெசவாளா் நகா் மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரா் கோயில், அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவானேஸ்வரா் கோயில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் செவ்வாய்க்கிழமை காலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து மாலை சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. மாலையில் மகா தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதேபோல அதியமான் கோட்டை தட்சிணகாசி காலபைரவா் கோயில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரா் கோயில், பாலக்கோடு புதூா் மாரியம்மன் கோயில், இருளப்பட்டி சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சவுளுப்பட்டி ஆதி லிங்கேஸ்வரா் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் காா்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள், கடைகள், வணிக வளாகங்களிலும் தீபம் ஏற்றப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT