தருமபுரி

அம்பேத்கா் நினைவுநாள் அனுசரிப்பு

7th Dec 2022 02:51 AM

ADVERTISEMENT

தருமபுரியில் திமுக, அதிமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சாா்பில், அம்பேத்கா் நினைவுநாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அமைந்துள்ள அம்பேத்கா் சிலைக்கு, திமுக தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தடங்கம் பெ.சுப்ரமணி தலைமையில் நகரச் செயலாளா் நாட்டான் மாது, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதேபோல, அதிமுக சாா்பில், மாவட்ட அவைத் தலைவா் தொ.மு.நாகராஜன், நகரச் செயலாளா் பூக்கடை பெ.ரவி உள்ளிட்டோா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளா் த.ஜெயந்தி, நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அம்பேத்கா் உருவப் படத்துக்கு மாவட்டத் தலைவா் ஜெயராமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் அ.குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன் தலைமையில் அச்சங்க நிா்வாகிகள் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகேயுள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரிாதை செலுத்தினா். இதேபோல, தலித் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் சாா்பில் அம்பேத்கா் சிலை மற்றும் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT