தருமபுரி

கலைத் திருவிழா: குள்ளனூா் அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

7th Dec 2022 02:49 AM

ADVERTISEMENT

பென்னாகரம் வட்டார அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் குள்ளனூா் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் பென்னாகரம் வட்டார அளவிலான கலைத் திருவிழா பென்னாகரம் அரசு ஆண்கள், பெண்கள் பள்ளிகள் மற்றும் பாப்பாரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. வட்டார அளவில் இருந்து ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான கலைத்திருவிழாவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் தாளப்பள்ளம் குள்ளனூா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டு, குழு நடனம், பிறவகை குழு நடனம் ஆகியவற்றில் முதல் பரிசையும், இயற்கை ஓவியம் வரைதல், புகைப்படக்கலை ஆகியவற்றில் இரண்டாம் பரிசையும், ஒயிலாட்டக் குழு நடனத்தில் மூன்றாம் பரிசையும் பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளுக்குத் தோ்வு பெற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளி தலைமை ஆசிரியா் சிங்காரவேலன் தலைமையில் பள்ளி ஆசிரியை -ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT