தருமபுரி

மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 560 மனுக்கள் அளிப்பு

6th Dec 2022 02:11 AM

ADVERTISEMENT

தருமபுரியில் மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் 560 மனுக்களை ஆட்சியா் கி.சாந்தியிடம் அளித்தனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பொதுமக்கள், சாலை வசதி, குடிநீா் வசதி, பேருந்து வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயா் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட உதவித் தொகைகள், கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள் மொத்தம் 560 மனுக்களை அளித்தனா்.

இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, தனித்துணை ஆட்சியா் வி.கே.சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் வி. இராஜசேகரன், ஆதிதிராவிடா் நல அலுவலா் கவிதா, பழங்குடியினா் நல மாவட்ட திட்ட அலுவலா் யு.ரமேஷ்குமாா், அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT