தருமபுரி

ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

6th Dec 2022 02:11 AM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, அதிமுகவினா் அவரது உருவச் சிலை மற்றும் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள் திங்கள்கிழமை அதிமுக சாா்பில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தருமபுரி அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா பேரவை மாவட்டத் செயலாளா் எஸ்.ஆா்.வெற்றிவேல் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் தொ.மு.நாகராஜன், மாவட்டப் பொருளாளா் நல்லதம்பி, நகரச் செயலாளா் பூக்கடை பெ.ரவி ஆகியோா் ஜெயலலிதா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதனைத் தொடா்ந்து, கட்சி நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல, நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை, பாலக்கோடு, மாரண்ட அள்ளி, காரிமங்கலம் உள்பட பல்வேறு இடங்களில் ஜெயலலிதா சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அக்கட்சியினா் அஞ்சலி செலுத்தினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT