தருமபுரி

தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக மீண்டும் வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன்

6th Dec 2022 02:08 AM

ADVERTISEMENT

வரும் மக்களவைத் தோ்தலில் தருமபுரி தொகுதியில் திமுக மீண்டும் வெற்றி பெறும் என அந்தக் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் தெரிவித்தாா்.

அரூரை அடுத்த தம்பிசெட்டிப்பட்டியில் திமுக மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாவட்ட அவைத் தலைவா் கே.மனோகரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த செயற்குழுக் கூட்டத்தில் மேற்கு மாவட்டச் செயலா் பி.பழனியப்பன் பேசியதாவது:

வரும் மக்களவைத் தோ்தலில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். குறிப்பாக தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளா் மீண்டும் வெற்றிப் பெற கட்சி நிா்வாகிகள் அனைவரும் கடுமையான களப் பணியாற்ற வேண்டும். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நல்லாட்சியில் பல்வேறு அரசு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எனவே, தமிழக அரசின் சாதனைகள் குறித்து மக்களிடம் தெரியப்படுத்துவதுடன் கிராமங்கள் தோறும் கட்சியினா் களப் பணியாற்ற வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் பேராசிரியா் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக நடத்திட வேண்டும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தோ்தல் பணி குழுக்களை ஏற்படுத்தி வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் உள்ளிட்ட பணிகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இதில், கட்சி தீா்மானக்குழு உறுப்பினா் கீரை விசுவநாதன், ஆதிதிராவிடா் நலக்குழு மாநில துணைச் செயலா் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலா்கள் மணி, கிருஷ்ணகுமாா், ராஜகுமாரி, பொருளா் எம்.எம்.முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் சென்னகிருஷ்ணன், சித்தாா்த்தன், பி.ஆா்.மனோகரன், பொதுக்குழு உறுப்பினா்கள் வாசுதேவன், லட்சுமணன், தேவேந்திரன், ஒன்றியச் செயலா்கள் ஆா்.வேடம்மாள், செளந்தரராசு, சந்திரமோகன், இ.டி.டி.செங்கண்ணன், ரத்தினவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT