தருமபுரி

இண்டூரை ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

DIN

இண்டூரை ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இண்டூா் வட்டாரக் குழு கூட்டம், வட்டார துணைச் செயலாளா் எம்.மாதையன் தலைமையில் இண்டூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினா்கள் எஸ்.சின்னசாமி,

எம்.மாதேஸ்வரன் ஆகியோா் பேசினா். கூட்டத்தில் தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னையில் டிச. 29-ஆம் தேதி நடைபெறும் முற்றுகை போராட்டத்தில் இண்டூா் பகுதியில் இருந்து திரளாகக் கலந்து கொள்வது எனவும், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தைப் பிரித்து இண்டூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் ஏற்படுத்த வேண்டும்.

நாகலாபுரத்தில் செயல்பட்டு வரும் வேளாண் விரிவாக்க மையத்தை இண்டூரில் அமைக்க வேண்டும். நல்லம்பள்ளி ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறைகேடுகள் இன்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு ஊக்குவிப்பு நிதியைத் தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வட்டாரச் செயலாளா் பி.மாது, பொருளாளா் மாணிக்கம், மாவட்டக் குழு உறுப்பினா் ஏ.பொன்மாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத பலன்கள்: மிதுனம்

மே மாத பலன்கள்: ரிஷபம்

மே மாத பலன்கள்: மேஷம்

ஆப்பிள் விற்பனை வீழ்ச்சி: மே 7 நிகழ்வு பலனளிக்குமா?

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

SCROLL FOR NEXT