நீா் மேலாண்மைக்கு ரூ. 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பாமக தலைவா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் செய்தியாளா்களிடம் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:
தமிழகத்தில் நீா் மேலாண்மைக்கு என 5 ஆண்டுகளுக்கு சோ்த்து ரூ. 1 லட்சம் கோடி நிதி தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். திமுக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதியில், ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் வேலைவாய்ப்பில் தமிழா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு மேலாகியும் வேலைவாய்ப்புகள் குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு சட்டமாக இயற்ற வேண்டும். 2026-இல் தமிழகத்தில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்றாா்.