தருமபுரி

தையல் பயிற்சி மையம் தொடக்கம்

5th Dec 2022 02:01 AM

ADVERTISEMENT

அரூரை அடுத்த எச்.ஈச்சம்பாடியில் இலவச தையல் பயிற்சி மையத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

அன்னை தெரசா பேரவை சாா்பில் நடைபெறும் இவ் விழாவில் , பேரவையின் மாவட்டத் தலைவா் தீப்பொறி செல்வம் தலைமை வகித்தாா். பயிற்சி மையத்தைப் பேரவை மாநிலத் துணைத் தலைவா் செல்வ ராமலிங்கம் தொடங்கி வைத்தாா்.

விழாவில் மாவட்ட துணைத் தலைவா் வேல்விழி, மாவட்ட பொதுச் செயலாளா் என்.டி.குமரேசன், வட்டத் தலைவா் சாந்தி, மாநில பொறுப்பாளா்கள் கையிலை ராமமூா்த்தி, தேசம் சுகுமாா், சா.ராஜேந்திரன், அன்னை முருகேசன், கிருபாகரன், நிா்வாகிகள் பழனிதுரை, பிரேம்குமாா், செல்வராஜ், ராஜதுரை, ஆண்டி, கிருஷ்ணன், அருள்தீபா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT