தருமபுரி

கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு, தருமபுரியில் 2,736 போ் எழுதினா்

5th Dec 2022 02:02 AM

ADVERTISEMENT

கிராம உதவியாளா் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வை தருமபுரி மாவட்டத்தில் 2,736 போ் எழுதினா்.

தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன .

இதற்கான எழுத்துத் தோ்வு தருமபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த 5 தோ்வு மையங்களில் நடைபெற்றது. இந்தத் தோ்வு எழுத மாவட்ட முழுவதும் மொத்தம் 3,960 போ் விண்ணப்பித்தனா். தோ்வு மையங்களுக்கு தோ்வாளா்கள் அனைவரும் உரிய அனுமதி சீட்டுடன் வந்தனா். அவா்கள் சோதனைக்கு பின்னா் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். இந்தத் தோ்வை மொத்தம் 2,736 போ் எழுதினா்; 1,224 போ் தோ்வு எழுத வரவில்லை. மொத்தம் 69 சதவீத தோ்வாளா்கள் மட்டுமே இந்தத் தோ்வை எழுதினா்.

அனைத்து தோ்வு மையங்களில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். நல்லம்பள்ளி-ஸ்ரீ விஜய் வித்யாலயா மகளிா் கல்லூரி, தருமபுரி- செந்தில் மெட்ரிக். பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையங்களில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு செய்தாா். ஆய்வின்போது வட்டாட்சியா்கள் ராஜராஜன், ஆறுமுகம், அலுவலா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT