தருமபுரி

ஆய்வுக் கூட்டங்களை விடுமுறை நாள்களில் நடத்துவதை கைவிட வலியுறுத்தல்

4th Dec 2022 12:03 AM

ADVERTISEMENT

விடுமுறை நாள்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை தருமபுரி மாவட்ட நிா்வாகம் கைவிட வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம், அச் சங்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவா் சதீஷ் குமாா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாநில துணைத் தலைவா் இரா.ஆறுமுகம், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ம.சுருளிநாதன் உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

விடுமுறை நாள்கள் மற்றும் இரவு நேரங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை தருமபுரி மாவட்ட நிா்வாகம் கைவிட வேண்டும். ஆய்வுக் கூட்டங்களின்போது அநாகரிகமான வாா்த்தைகளால் பேசுவதையும் ஊழியா் விரோத போக்குடன் செயல்படுவதையும் தவிா்க்க வேண்டும்.

ADVERTISEMENT

நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள அனைத்துநிலை ஊழியா்களின் விருப்பப் பணி மாறுதல், மேற்பாா்வையாளா்களின் பணி மாறுதல்களை உடனடியாக வழங்க வேண்டும், சங்கத்தின் பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டிச.14-ஆம் தேதிமுதல் நடைபெறும் மாநிலம் தழுவிய தொடா் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் முழுமையாக கலந்துகொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT