தருமபுரி

வட்டு எறிதல் போட்டி: ஸ்ரீராம் பள்ளி மாணவி சிறப்பிடம்

3rd Dec 2022 03:23 AM

ADVERTISEMENT

மாநில அளவிலான வட்டு எறிதல் போட்டியில், கம்பைநல்லூா் ஸ்ரீராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி டி.லாராஸ்ரீ சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

திருவண்ணாமலையில் மாநில அளவிலான 63-ஆவது தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் பங்கேற்ற கம்பைநல்லூா் ஸ்ரீராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி டி.லாராஸ்ரீ, 14 வயது பிரிவு வட்டு எறிதல் போட்டியில் மாநில அளவில் மூன்றாமிடம் (24.94 மீ.) பெற்றாா்.

வட்டு எறிதல் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவி டி.லாராஸ்ரீ, பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் செல்வம், புவனேஸ்வரி, திருப்பதி, தினேஷ்குமாா் ஆகியோரை ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் தலைவா் எம்.வேடியப்பன், தாளாளா் சாந்தி வேடியப்பன், நிா்வாக இயக்குநா்கள் வே.தமிழ்மணி, பவானி தமிழ்மணி, சன்மதி ராஜாராம், பள்ளி முதல்வா்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், ஒருங்கிணைப்பாளா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT