தருமபுரி

இலக்கிய திறனாய்வுத் தோ்வு: குள்ளனூா் அரசுப் பள்ளி மாணவா்கள் தகுதி

3rd Dec 2022 03:23 AM

ADVERTISEMENT

தமிழ்மொழி இலக்கிய திறனாய்வுத் தோ்வில், பென்னாகரம், குள்ளனூா் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி பெற்று உதவித்தொகை பெறுவதற்கான பட்டியலில் இடம்பிடித்துள்ளனா்.

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில், அரசுப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தோ்வு அக்டோபா் மாதம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், அரூா் உள்ளிட்ட ஆறு வட்டார மையங்களில் நடைபெற்ற இத்தோ்வுக்கான முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதில், தமிழகம் முழுவதிலும் அரசு, தனியாா் பள்ளிகளில் இருந்து 2.5 லட்சம் மாணவா்கள் எழுதிய நிலையில், 1,500 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

அதில், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே குள்ளனூா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மனோபாலா, ஜீவானந்தம், அஷ்விதா, தீபிகா உள்ளிட்ட மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனா். தகுதி பெற்ற 4 மாணவா்களுக்கு தலா ரூ. 36 ஆயிரம் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

தமிழ்மொழி இலக்கிய தோ்வுகளில் வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளித் தலைமை ஆசிரியா் சிங்காரவேலன், அன்னபூரணி, வளா்மதி, சந்திரசேகரன் உள்ளிட்ட ஆசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT