தருமபுரி

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்: பேகார அள்ளி பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

3rd Dec 2022 03:24 AM

ADVERTISEMENT

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பேகாரஅள்ளி அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அண்மையில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டிகளில் பேகாரஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்று விளையாடினா். இதில், 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் பிளஸ் 2 மாணவி புனிதா, 17 வயதுக்குள்பட்டோா் பிரிவில் 10-ஆம் வகுப்பு மாணவி ராணி ஆகியோா் வெள்ளிப் பதக்கம் பெற்று, மாநிலப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனா்.

டேக்வாண்டோ மாணவியா் பிரிவில் 10-ஆம் வகுப்பு மாணவி மேகவா்த்தினி, பிளஸ் 1 வகுப்பு மாணவியா் சந்தியா, தீபா, துா்கா ஆகியோரும், மாணவா்கள் பிரிவில் 10-ஆம் வகுப்பு மாணவா் சக்தி ஆகியோா் தங்கப் பதக்கம் பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றனா். இதேபோல, கோ-கோ, ஹாக்கி போட்டிகளில் பங்கேற்ற இந்தப் பள்ளி மாணவ, மாணவியா் வெற்றிபெற்று மாநிலப் போட்டிகளில் பங்கேற்று விளையாட தகுதிபெற்றனா்.

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் வகித்த மாணவ, மாணவியரை பள்ளித் தலைமை ஆசிரியா் மு.சுரேஷ், உடற்கல்வி ஆசிரியா்கள் குமரன், அமிா்தராஜ், வைரம்மாள், டேக்வாண்டோ பயிற்சியாளா் ராமமூா்த்தி, ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT