தருமபுரி

கடமடை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய தரச்சான்று குழுவினா் ஆய்வு

2nd Dec 2022 02:14 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அருகே கடமடை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், மத்திய தேசிய தரச்சான்று குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பென்னாகரம் அருகே கடமடை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவா்

ஹோபடேனிஸ்சிங், லைசராம் கொஜேந்திர சிங் உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்தக் குழுவினா் கடமடை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரத்தில் உள்ள வெளிநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, பொது நிா்வாகப் பிரிவு, தேசிய சுகாதார திட்டப் பிரிவு, ஆய்வகங்கள், பிரசவப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்து, மருத்துவா்களின் அணுகுமுறைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தனா்.

ADVERTISEMENT

ஆய்வுகளின் போது, வட்டார மருத்துவ அலுவலா் ஜெயச்சந்திர பாபு, கடமடை மருத்துவ அலுவலா் ஆனந்த ஜோதி, மேகனா, சுகாதார ஆய்வாளா் மனோஜ் குமாா், செவிலியா்கள் கலா, விமலா, வள்ளியம்மாள், மொ்சி, புவனா, ஹேமலதா, தேன்நிலா, பிரியா, தீக்ஷிதா, ஆய்வாளா் தமிழரசி, கண் பரிசோதனை நிபுணா் குணாளன், ஆய்வாளா் தமிழரசி, மருத்துவமனை பணியாளா்கள் மகேஸ்வரி, மலா்கொடி, வட்டார மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT