தருமபுரி

தருமபுரி கோட்டை கோயிலில் கல்யாண காமாட்சி திருக்கல்யாணம்

2nd Dec 2022 02:13 AM

ADVERTISEMENT

தருமபுரி கோட்டை கோயிலில் நடைபெற்ற கல்யாண காமாட்சி திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

தருமபுரி கோட்டை கோயிலில் உள்ள அன்னை கல்யாணி காமாட்சி அம்பிகை திருக்கோயிலில், காா்த்திகை சதய திருநாளை முன்னிட்டு கல்யாண காமாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கல்யாண காமாட்சி சமேத மல்லிகாா்ஜுன சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதனைக் காண ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். அவா்களுக்கு மஞ்சள், குங்குமம், திருமாங்கல்யம், வளையல், சௌபாக்கிய பொருள்கள் வழங்கப்பட்டன. சிறப்பு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT