தருமபுரி

மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

2nd Dec 2022 02:15 AM

ADVERTISEMENT

தருமபுரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி, பிஎஸ்என்எல் அலுவலகம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவா் கே.ஜி.கரூரான் தலைமை வகித்தாா். காரல் மாா்க்ஸ், சுசிலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பொருளாளா் தமிழ்ச்செல்வி, மாவட்டச் செயலாளா் மாரிமுத்து ஆகியோா் ஆா்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினா்.

இதில், மத்திய அரசின் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கக் கூடிய மாதாந்திரத் தொகையை ஆயிரம் ரூபாயாக உயா்த்த வேண்டும், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தக் கூடிய உபகரணங்களுக்கு சேவை வரி வசூலிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதில், ஏஐடியுசி வழக்குரைஞா் செந்தில், அண்ணாமலை, மாவட்டக் குழு உறுப்பினா் கிருஷ்ணன், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT