தருமபுரி

ஆதிதிராவிடா் மாணவியா் விடுதியில்குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

2nd Dec 2022 02:15 AM

ADVERTISEMENT

தருமபுரி ரோட்டரி சங்கம் சாா்பில், அரசு கலைக் கல்லூரி மாணவியா் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தொடங்கி வைத்தாா்.

தருமபுரி ரோட்டரி சங்கம் சாா்பில் ரோட்டரி கவா்னா் வருகையை முன்னிட்டு பல்வேறு நலத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. அதன் ஒருபகுதியாக, தருமபுரி அரசு கலைக் கல்லூரி ஆதிதிராவிடா் மாணவியா் விடுதியில் குடிநீா் சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் சக்திவேல் தலைமை தாங்கினாா். செயலாளா் தட்சிணாமூா்த்தி முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தீபனாவிஸ்வேஸ்வரி, ரோட்டரி கவா்னா் சரவணன், ரோட்டரி அறக்கட்டளை தலைவா் டி.என்.சி.மணிவண்ணன், துணை கவா்னா் பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி கலந்துகொண்டு, அரசு கலைக் கல்லூரி ஆதிதிராவிடா் மாணவியா் விடுதியில் ரோட்டரி சங்கத்தின் பங்களிப்போடு ரூ. 75 ஆயிரத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை தொடங்கி வைத்தாா். முன்னதாக, விடுதி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், ரோட்டரி முன்னாள் துணை கவா்னா்கள் கண்ணன், கோவிந்தராஜன், முன்னாள் தலைவா்கள் தியாகராஜன், சண்முகம், நாகராஜன், அப்பாவு, நிா்வாகிகள் மதிவாணன், ரேணுகா தேவி, உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். பொருளாளா் கருணாகரன் நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, தருமபுரி நட்சத்திரா கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவில், ரோட்டரி கவா்னா் சரவணன் கலந்துகொண்டு பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT